News January 1, 2026

மானத்தை விட்டுட்டு விஜய் கூட்டணிக்கு போறதா? திருமா

image

திமுகவிடம் சண்டை போட்டு கூடுதல் ‘சீட்’ கேட்போமே தவிர, கூட்டணியில் இருந்து விலக மாட்டோம் என திருமா கூறியுள்ளார். மக்கள் ஆதரவு விஜய்க்கு இருப்பதால் திமுக கூட்டணி தோற்றுவிடும் என பலர் சொல்வதாக குறிப்பிட்ட அவர், தோற்றுவிடுவோம் என்பதற்காக மானத்தை விட்டுவிட்டு தவெக கூட்டணியில் இணைய முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒருபோதும் சீட்டுக்காக அரசியல் செய்ய மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 4, 2026

இந்தியாவுக்கு 311 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கன்

image

U-19 WC தொடரில் இந்தியாவுக்கு எதிரான 2-வது அரையிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் 310 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டான நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான பைசல் ஷினோசாடா , உசைருல்லாஹ் நியாசாய் சதம் விளாசி அசத்தினர். இதனால், அந்த அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. IND-வின் தீபேஷ் தேவேந்திரன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

News February 4, 2026

திமுக எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்க: ஆதவ் அர்ஜுனா

image

கரூரில் தனியார் TV செய்தியாளர், ஒளிப்பதிவாளரை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் ஸ்ரீரங்கம் MLA பழனியாண்டியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளார். வீடியோ ஆதாரங்கள் இருந்தும் ஒருவாரமாக இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க அஞ்சுவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக பழனியாண்டி மீது நடவடிக்கை எடுக்க திருச்சி MP துரை வைகோவும் வலியுறுத்தியிருந்தார்.

News February 4, 2026

கூட்டணியால் காங்., பலவீனம்: பிரவீன்

image

தமிழகத்தில் காங்கிரஸுக்கு 12% வாக்கு வங்கி இருக்கிறது; ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக கூட்டணி அரசியலால் காங்கிரஸ் பலவீனமாகி வருவதாக பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மகாராஷ்டிரா, உ.பி., பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் காங்., பலவீனமாகி வருகிறது என்ற எண்ணம் கட்சியினர் மத்தியில் வந்துவிட்டது; கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸின் உண்மையான பலமே வேறு எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!