News January 1, 2026

காஞ்சிபுரம்: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

image

காஞ்சிபுரம் மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

Similar News

News January 10, 2026

காஞ்சிபுரத்தில் மோசடி வக்கீல் கைது!

image

காஞ்சிபுரம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வந்த பத்மநாபன்(58) என்பவர் விபத்து வழக்குகளில் வாதாடி, காப்பீட்டு நிறுவனங்களிலிருந்து இழப்பீட்டுத் தொகை பெறுவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் நடந்த வழக்கில், விசாரணை சி.பி.சி.ஐ.டிக்கு ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, வாகன விபத்து வழக்குகளில் மோசடியில் ஈடுபட்ட பத்மநாபனை நேற்று(ஜன.9) கைது செய்தனர்.

News January 10, 2026

காஞ்சிபுரத்தில் பயங்கர தகராறு!

image

படப்பை அருகே 2 நாட்களுக்கு முன்பு மது குடித்து கொண்டிருந்த நண்பர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில், பிரகாச்ஜ்(35), ராம்குமார்(28), முருகன்(24), அருண்(35), குபேந்திரன்(27), மேகநாதன்(30), விக்னேஷ்(25), சரத்(25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில், விக்னேஷ் என்பவருக்கு தலையில்காயம் ஏற்பட்டுள்ளது.

News January 10, 2026

காஞ்சிபுரம் சிறுமிக்கு பாலியல் வன்முறை!

image

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் சீண்டல் செய்த அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராஜ்(21), அன்பரசன்(23), சிவதாஸ்(44) ஆகியோரை கடந்த 2018ஆம் ஆண்டு போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் நேற்று முன் தினம் தங்கராஜிற்கு 7 ஆண்டு சிறை, ரூ.11 ஆயிரம் அபராதம், அன்பரசன் மற்றும் சிவதாஸ் ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை, ரூ.5,500 அபராதம் விதித்து போக்சோ சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்தது.

error: Content is protected !!