News January 1, 2026
பள்ளிபாளையத்தில் அதிரடி முடிவு!

பள்ளிபாளையம் அடுத்துள்ள தொட்டிக்காரன் பாளையத்தில் கறிக்கோழி பண்ணையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கறிக்கோழி வளர்ப்புக் கூலியாக ஒரு கிலோவிற்கு ரூ.20-ம், நாட்டுக்கோழிக்கு ரூ.75-ம், காடைகளுக்கு ரூ.7-ம் வழங்க வேண்டும் இதனை ஏற்காத கறிக்கோழி நிறுவனங்களைக் கண்டித்து, இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகப் பண்ணையாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
Similar News
News January 15, 2026
நாமக்கல்: ஜல்லிக்கட்டு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஜனவரி 18-ம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான இணையவழிப் பதிவு தொடங்கியுள்ளது. விருப்பமுள்ளவர்கள்<
News January 15, 2026
நாமக்கல்லில் தகாத உறவால் அரங்கேறிய பகீர் சம்பவம்!

நாமக்கல் அருகே பேளுக்குறிச்சியில், சங்கீதா என்ற பெண்ணுடன் தகாத உறவில் இருந்த ஆட்டோ டிரைவர் கதிரவனை, அப்பெண்ணின் 17 வயது மகன் கோடாரியால் சரமாரியாக வெட்டினார். இதைக் கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்த கதிரவனின் தாய் ஜானகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கதிரவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, தாக்குதல் நடத்திய சிறுவனை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
News January 15, 2026
நாமக்கல்லில் முட்டை விலை ரூ.5.60 ஆக நிர்ணயம்

நாமக்கல்லில் நேற்று (ஜன. 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.60 என நிர்ணயிக்கப்பட்டது. குளிர்காலம் முடிந்து நுகர்வு சற்று குறைந்துள்ளதால் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முட்டை விலையில் மாற்றமின்றி இதே நிலை நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


