News January 1, 2026

மக்களை ஆளக்கூடிய திறன் கொண்டவர் EPS: செல்லூர் ராஜு

image

TN-ல் சினிமா கவர்ச்சி எப்போதும் உண்டு என்பதால் விஜய்க்கு கூட்டம் கூடுவது சகஜம்தான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அமிதாப் பச்சன் வந்தால் கூடத்தான் கூட்டம் கூடும் என்ற அவர், விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் மேட்டர் இல்லை, யார் நம்மை ஆளப்போகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும், மக்களை ஆளக்கூடிய நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதை EPS நிரூபித்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News February 13, 2026

ஒரு நாளைக்கு ₹200.. உணவு கார்டுகளுக்கு வரிவிலக்கு!

image

Pluxee, Zaggle போன்ற அலுவலக உணவு கார்டுகளுக்கான வரிவிலக்கு வரம்பை உயர்த்த வருமான வரி வரைவு விதிகள் 2026 முன்மொழிந்துள்ளது. இதன்படி ஒரு நாளைக்கு ₹100 ஆக இருக்கும் வரம்பு இனி ₹200 ஆக உயர்த்தப்படும். இது ஏற்கப்பட்டால், உணவு கூப்பன்கள் (அ) கார்டுகளுக்கு ஆண்டுக்கு ₹1,05,600 வரை வரிவிலக்கு பெற முடியும். இந்த சலுகை பழைய வரி முறையின் கீழ் பொருந்தும். புதிய வரி முறைக்கு தெளிவாக இன்னும் வழங்கப்படவில்லை.

News February 13, 2026

மக்களுக்கு விஜய் எப்படி நல்லது செய்வார்? EPS

image

அதிமுக குறித்த விஜய்யின் மறைமுக விமர்சனத்திற்கு EPS பதிலடி கொடுத்துள்ளார். கரூர் துயரின் போது 72 நாள்களாக விஜய் வெளியே வரவில்லை என்றும், கட்சி அலுவலகத்தை மூடிவிட்டு சென்றதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கரூர் சம்பவத்தில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமையை கூட கட்சியின் தலைவராக விஜய் செய்யவில்லை என சாடிய EPS, இவரெல்லாம் எப்படி மக்களுக்கு நன்மை செய்வார் எனவும் கேள்வி எழுப்பினார்.

News February 13, 2026

அரசியல் களத்தை விஜய் வலிமையாக்குகிறாரா?

image

உரிமைத் தொகை உயர்வு, EPS-க்கு பதிலடி, வீட்டில் இருந்தே அரசியல், சிறுவன் தனது பெற்றோரை விசில் சின்னத்துக்கு வாக்களிக்கச் சொன்னது என அனைத்தையும் இன்று பேசினார் விஜய். அரசியல் களம் முதல் ஆன்லைன் வரை விஜய் அப்டேட்டாக உள்ளார் என்றே இன்றைய பேச்சின் மூலம் அறிய முடிவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். அதேபோல், தேர்தல் வாக்குறுதி என்ற அடுத்தகட்ட முன்னெடுப்பையும் விஜய் எடுத்துள்ளார்.

error: Content is protected !!