News May 2, 2024
ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்குகுத் தடை

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓராண்டு சிறை தண்டனையுடன் ₹5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணையவழி சூதாட்டம், பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறியுள்ள தமிழக அரசு, இந்தத் தடையை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறுவோருக்கு 1-3 ஆண்டுகள் வரை சிறை மற்றும் ₹5-₹10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
Similar News
News March 20, 2026
BIG NEWS: பள்ளி முழு ஆண்டு தேர்வு தேதி அறிவிப்பு

அரசு, அரசு உதவிபெறும் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு அட்டவணை வெளியாகியுள்ளது. 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்.6 முதல் ஏப்.16 வரையும் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்.1 முதல் ஏப்.16 வரையும் முழு ஆண்டு தேர்வுகள் நடைபெறவுள்ளன. இதனையடுத்து, சுமார் ஒன்றரை மாதத்துக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. SHARE IT
News March 20, 2026
அலர்ட்: 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

கோடை வெப்பம் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், எதிர்பாராத விதமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 26-ம் தேதி வரை மழை நீடிக்கும் என IMD கணித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 1 மணி நேரத்திற்கு குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. உங்க ஊரில் இப்போ மழை பெய்யுதா?
News March 20, 2026
வேட்புமனு.. ஒரு வாரம் கெடு விதித்த தவெக

தவெக வேட்புமனுக்கள் எக்காரணம் கொண்டும் நிராகரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் விஜய் உறுதியாக உள்ளாராம். அதன்படி, வேட்பாளர்களின் உறுதிமொழி பத்திரங்களை ஒரு வாரத்திற்குள் சட்ட வல்லுநர்களின் துணையோடு தயார் செய்து தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று மா.செ.,க்களுக்கு புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளார். அவை தலைமை ஆய்வு செய்த பின்னரே இறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


