News January 1, 2026
பெண்களே.. மார்பகங்களில் இதை அவசியம் கவனிங்க

உலகம் முழுவதும் பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில், மார்பகப் புற்றுநோயே முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் மார்பக புற்றுநோய் பாதிப்பில், 25% உடன் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆரம்ப நிலையிலேயே இதைக் கண்டறிந்தால், மார்பகத்தை அகற்றாமல் சிகிச்சையின் மூலமாகவே குணப்படுத்தலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதற்கான சில எளிய வழிமுறைகளை மேலே SWIPE பண்ணி பாருங்க.
Similar News
News February 8, 2026
ஏழை எளிய மக்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சேபனையற்ற அரசுப் புறம்போக்கு நிலங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் ஏழை எளிய மக்கள், தங்கள் நிலத்தை வரன்முறைப்படுத்தி பட்டா பெற்றுக்கொள்ள அரசு ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது. சென்னை போன்ற மாநகரங்களை ஒட்டியுள்ள ‘பெல்ட் ஏரியா’ எனப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், தங்களின் நில ஆவணங்களுடன் உரிய வருவாய்த் துறை அலுவலகங்களை அணுகி, பிப்.28-க்குள் விண்ணப்பித்து, நில உரிமையை பெற்றுக்கொள்ளலாம்.
News February 8, 2026
இந்திய அணி வரலாறு படைக்கிறது

அமெரிக்காவை வென்றதன் மூலம், T20 WC-ல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற அணி என்ற வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது. 2024 முதல் தொடர்ச்சியாக 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், தெ.ஆப்.,வை (2024-ல் 8 வெற்றிகள்) முந்தியுள்ளது. ஒருநாள், T20 போட்டிகள் உட்பட WC-ல் ஒட்டுமொத்தமாக 100 வெற்றிகளை இந்திய அணி நிறைவு செய்துள்ளது. ஆஸி.,க்கு பிறகு (108) இந்த சாதனையை எட்டிய 2-வது அணி இந்தியா.
News February 8, 2026
திமுக கூட்டணியில் VCK தொடர்கிறது: திருமா

கடந்த 2 நாள்களாக அரசியலில் விவாதப்பொருளாக இருப்பது திமுக கூட்டணிக்குள் PMK (ராமதாஸ்) VCK வெளியேறும் என்பதுதான். இதை மையப்படுத்தி விசிகவினரும், பாமகவினரும் சோஷியல் மீடியாவில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் விசிக தொடருவதாகவும், திருபுவாதங்களுக்கும், அவதூறுகளுக்கும் இடம் தரும் வகையில் விசிகவினர் கருத்துகள் அமைந்துவிடக்கூடாது எனவும் திருமா அறிவுறுத்தியுள்ளார்.


