News January 1, 2026
போடி அருகே மனைவி, மாமியாரை தாக்கிய கணவர்

போடி அருகே மணியம்பட்டியை சேர்ந்தவர் திவ்யா (28). இவரது கணவர் நாராயணன் (35). இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி மனைவி மீது சந்தேகப்பட்டு அவரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் திவ்யா கோபித்துக் கொண்டு அவரது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று (டிச.31) மாமியார் வீட்டுக்கு சென்ற நாராயணன் மனைவி மற்றும் மாமியாரை தாக்கி உள்ளார். போடி தாலுகா போலீசார் நாராயணனை கைது செய்தனர்.
Similar News
News January 16, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று 15.01.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News January 15, 2026
தேனி: இலவச GAS அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

தேனி மாவட்ட மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 15, 2026
தேனி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE IT


