News January 1, 2026

நடிகை நந்தினி தற்கொலை.. அதிர்ச்சியூட்டும் தகவல்

image

<<18711260>>நடிகை நந்தினி<<>> தற்கொலைக்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், இறந்துபோன அவரது தந்தையின் அரசு வேலையை கருணை அடிப்படையில் நந்தினிக்கு வழங்க ஏற்பாடுகள் நடந்துள்ளன. ஆனால், நடிப்பில் விருப்பம் இருந்ததால் அதனை அவர் ஏற்க மறுத்துள்ளார். வேலையில் சேர்ந்தால் உடனடியாக திருமண ஏற்பாடுகள் நடைபெறும் என எண்ணிய நந்தினி இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. So sad!

Similar News

News January 10, 2026

CM தொகுதியில் ஸ்கெட்ச் போடுகிறதா தவெக?

image

திமுகவின் ஆதரவாளராக இருந்து வந்த நாஞ்சில் சம்பத் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். திமுகவுக்காக பல பொதுக்கூட்ட மேடையில் ஏறி பேசிய அவரை தற்போது தவெகவுக்காக பேச இறக்கிவிட விஜய் திட்டமிட்டிருக்கிறாராம். அதிலும், முதல் தொகுதியாக CM ஸ்டாலினின் கொளத்தூரில் அவர் பேச நாஞ்சில் சம்பத்தே விருப்பம் காட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்பீச்சில் திமுகவை அவர் கடுமையாக விமர்சிக்கலாம் என்கின்றனர்.

News January 10, 2026

தங்கம் விலை கிடுகிடுவென மாற்றம்

image

வார இறுதி நாளான இன்று சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, 1 அவுன்ஸ்(28g) தங்கம் $56.97 உயர்ந்து $4,509-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலையும் அவுன்ஸ் $4.34 உயர்ந்து $79.91-க்கு விற்பனையாகிறது. இதன் காரணமாக இந்திய சந்தையிலும் இன்று தங்கம் விலை(நேற்றைய விலை :சவரன் ₹1,02,400) உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 10, 2026

விஜயகாந்துக்கு பாரத ரத்னா வழங்குக: தேமுதிக

image

விஜயகாந்த் இறந்த பிறகு கடலூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், தொண்டர்களின் எழுச்சி அதிகமாக இருந்ததாக பிரேமலதா கூறியுள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும் என தேமுதிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன், பொது இடத்தில் விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!