News January 1, 2026

மயிலாடுதுறை: SP தலைமையில் குறைதீர் நாள் கூட்டம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு SP-யிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 6 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு SP அறிவுறுத்தினார். காவல் ஆளிநர்களின் 2 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Similar News

News January 20, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

பொதுமக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்க செல்லும் போது முன் பின் தெரியாத நபர்களிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுக்க வேண்டாம். மேலும் தங்களது பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் இதன் மூலம் தங்களது பணம் திருடு போக வாய்ப்புள்ளதாக மாவட்ட காவல் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

News January 20, 2026

மயிலாடுதுறை: அரசு சுகாதார துறையில் வேலை

image

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 20, 2026

மயிலாடுதுறை: கையேடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

image

சீர்காழி அருகே உள்ள மேலையூர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு தேர்வுக்கான வினா விடை தொகுப்பு வெற்றி நிச்சயம் கையேடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கினார். இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!