News January 1, 2026
ராணிப்பேட்டை மக்களுக்கு எஸ்.பி. அய்மன் ஜமால் புத்தாண்டு வாழ்த்து

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ராணிப்பேட்டை மக்கள் அனைவருக்கும் தனது 2026 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பிறக்கும் 2026 புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அமைதி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் வளத்தை நிறைக்கட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பொதுமக்கள் புத்தாண்டை பொறுப்புடன் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டார்.
Similar News
News January 10, 2026
ராணிப்பேட்டையில் மழையால் மின்தடையா? உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.. சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நேரத்தில் மின்தடை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டால் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், லைன்மேன் வந்து சரிசெய்யவர். (அ) 9445850811 இந்த வாட்ஸ் ஆப் எண்ணிலும் புகார் செய்யலாம். SHARE IT!
News January 10, 2026
ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

ராணிப்பேட்டை, பெரும்புலிப்பாக்கம் பகுதியில் நேற்று (ஜன.9) கார், வேன் என மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் சென்னை பூந்தமல்லி வரதராஜபுரத்தைச் சேர்ந்த தீபக் என்ற டிரைவர் சம்பவத்தில் உயிரிழந்தார். இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 10, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


