News January 1, 2026

ஈரோட்டில் பேருந்து விபத்து

image

ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு ரயில் நிலையம் செல்வதற்கு தனியார் பஸ் தயார் நிலையில் நின்று இருந்தது. அப்போது அரசு மருத்துவமனை நோக்கி சென்ற அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது. எதிர்பாராத விதமாக 2 பஸ்களும் மோதிக்கொண்டன. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இரு பஸ்களின் டிரைவர்கள், கண்டக்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News January 7, 2026

ஈரோடு: SBI வங்கியில் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

image

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. இப்பணிக்கான விண்ணப்ப தேதி ஜன.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 20-35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. இந்த நல்ல தகவலை SHARE செய்யுங்க

News January 7, 2026

அறிவித்தார் ஈரோடு கலெக்டர்

image

ஜனவரி மாதத்தில் திருக்குறள் வார விழாவை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இருந்து 30 பேரை தேர்வு செய்ய திருக்குறள் வினாடி வினா தேர்வு வரும் 9-ம் தேதி ஈரோடு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 7, 2026

ஈரோடு அருகே பேருந்து மோதி ஒருவர் பலி

image

பவானிசாகர் புங்கார்காலனி பகுதியை சேர்ந்தவர் சிவலிங்கம் தனியார் பேப்பர் மில்லில் வேலை புரிந்து வருகிறார். இவர் பணி முடித்து தனது வீட்டிற்கு நடந்து கொண்டிருக்கும் பொழுது பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவலிங்கத்தை அக்கம்பக்கத்தினர் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலே உயிரிழந்தார்.

error: Content is protected !!