News January 1, 2026
நாகை: ரயில் நேரம் மாற்றம்

வேளாங்கண்ணி – எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில், காரைக்குடியில் மின்சார எஞ்சின், டீசல் எஞ்சின் ஆக மாற்றம் செய்யப்படுவதால், இரவு 11:05க்கு புறப்பட்ட ரயிலானது இனி செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11:50க்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்துறைப்பூண்டி முதல் காரைக்குடி வரை உள்ள ரயில் பாதையானது மின் மயமாக்கப்பட்டதும் ரயில் வழக்கம்போல இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 25, 2026
நாகை: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

நாகை மக்களே..உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதே போன்று, A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News January 25, 2026
நாகை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
News January 25, 2026
நாகை: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.


