News January 1, 2026
புதுகை: வேன் மோதி தனியார் நிறுவன ஊழியர் படுகாயம்

சென்னை தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தீபக்(40), கேசவ்(33), நித்தின்(33) ஆகியோர் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி 2 டூவீலர்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது புதுகை – கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கேசவ் புதுகை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Similar News
News January 12, 2026
புதுக்கோட்டை:இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News January 11, 2026
புதுக்கோட்டை: பாவங்களை போக்கும் கோயில்!

திருமயம் மையப்பகுதியில் உள்ள மலையை சுற்றி ஒரு கோட்டை அமைந்துள்ளது. இந்த கோட்டை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிழவன் சேதுபதி மன்னரால் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த கோட்டையில் மலையை குடைந்து குடைவரை கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சிவன், விஷ்ணு சன்னிதிகள் ஒரே இடத்தில் இருக்கின்றன. இங்கு சென்று வழிபட்டால் பாவம் நீங்கும் என்பது நம்பிக்கை. இத்தகவலை SHARE பண்ணுங்க..
News January 11, 2026
புதுக்கோட்டை: ஆதார் கார்டு இருக்கா? SUPER தகவல்!

புதுக்கோட்டை மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே<


