News January 1, 2026

தருமபுரி: எமனாய் மாறிய நாய்- முதியவர் பரிதாப பலி!

image

கம்பைநல்லூர் அருகே எலவடையைச் சேர்ந்த விவசாயி மோகன் (52), மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அம்மாபேட்டை பிரிவு ரோடு அருகே திடீரென நாய் குறுக்கே வந்ததால், நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 2, 2026

தருமபுரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா!

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் புத்த மதத்தினர் சமயநர்கள் சீக்கியர்கள் ஆகியோர்களின் உரிமைகள் மற்றும் சிறுபான்மையுருக்கான நலத்திட்டங்கள் சென்றடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா கொண்டாட இருக்கிறது. இதனை வருகின்ற ஜன.08 மாலை 4.00 மணிக்கு மா.ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. என ஆட்சியர் இன்று அறிவித்தார்.

News January 2, 2026

தருமபுரி: கடன் தொல்லை நீங்கி, வாழ்க்கையில் நன்மை பெற..!

image

தருமபுரியில் அமைந்துள்ள ‘கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்’ ஆன்மீகம் மற்றும் கட்டிடக்கலையின் சங்கமமாகத் திகழ்கிறது. சுமார் 1200 ஆண்டுகள் பழமையான இக்கோயில், பக்தர்களுக்கு வேண்டுவதை அருளும் ஒரு புனிதத் தளமாகவும் போற்றப்படுகிறது. மேலும், இங்கு பிரார்த்தனை செய்தால் திருமணப் பேறு, புத்திர பாக்கியம், கடன் தொல்லை & வழக்குத் துயரங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக திகழ்கிறது.

News January 2, 2026

தருமபுரி: 10th PASS போதும், ரூ.37,815 சம்பளத்தில் வேலை ரெடி!

image

தருமபுரி மக்களே, பெடரல் பேங்க் வங்கிகளில் அலுவலக உதவியாளர்கள் (Office Assistant) பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக, ரூ.19,500 – ரூ.37,815 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் ஜன.08ம் தேதிக்குள் இந்த <>லிங்கை <<>>கிளிக் செய்து விண்ணப்பித்து, இப்போதே உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர்!

error: Content is protected !!