News January 1, 2026
T20I WC.. இதுதான் ஆஸி., படை!

2026 T20 WC-க்கான ஆஸி., அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிட்செல் மார்ஷ்(கேப்டன்), சேவியர் பார்ட்லெட், கூப்பர் கானோலி, பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், கேமரூன் கிரீன், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ் & ஆடம் ஸாம்பா. பந்தயம் அடிக்குமா இந்த அணி?
Similar News
News January 23, 2026
மதுரையில் கிராம சபை கூட்டம் தேதி அறிவிப்பு

மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அனைத்து ஊராட்சிகளிலும் வருகிற 26ம் தேதி குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை, கிராம வளர்ச்சி திட்டம், தொகுதி மேம்பாட்டு திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில் கிராமத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டோர் கலந்து கொள்ளலாம்.
News January 23, 2026
காத்திருந்து காலத்தை தவற விடுகிறாரா விஜய்?

முதல் மாநாட்டிலேயே கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூறி TN அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தினார் விஜய். ஆனால் இவர் இந்த அறிவிப்பை வெளியிட்டு 1.5 ஆண்டுகள் ஆகிவிட்டது, தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே இருக்கிறது. இருப்பினும் எந்த பெரிய கட்சியும் விஜய்யுடன் கூட்டணி அமைக்கவில்லை. இந்நிலையில், விஜய்க்கு இது பின்னடைவுதான் என அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர். உங்கள் கருத்து?
News January 23, 2026
உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா செய்க.. திமுகவுக்கு நெருக்கடி

இந்திய அரசியலமைப்பின் மீது பதவிப்பிரமாணம் செய்துவிட்டு அதனை மீறிய உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர்(DCM) பதவியில் இருந்து விலக வேண்டும் என பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது. சனாதன தர்மம் தொடர்பான உதயநிதியின் கருத்து வெறுப்பு பேச்சுக்கு சமம் என <<18913574>>SC நீதிபதியின் கருத்தை<<>> சுட்டிக்காட்டிய அமைச்சர் பியூஷ் கோயல், அண்ணாமலை ஆகியோர் உதயநிதியை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என CM ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளனர்.


