News January 1, 2026
PM மோடி புத்தாண்டு வாழ்த்து!

நாட்டு மக்கள் அனைவருக்கும் PM மோடி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனது எக்ஸ் பதிவில், 2026-ம் ஆண்டு, அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும் செல்வ செழிப்பையும் வழங்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மக்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைந்து, காரியங்கள் முழுமையடைய வாழ்த்தியுள்ளார். நம் சமுதாயத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News January 31, 2026
ராசி பலன்கள் (31.01.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News January 31, 2026
BREAKING: அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள்

அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையவிருப்பதாக EPS அறிவித்துள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிய அவர், சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அந்த கட்சிகள் அதிமுக கூட்டணியில் இணையும் என்றார். கனிமொழியுடன் கூட்டணி குறித்து பேசியதை பிரேமலதா மறுத்துள்ள நிலையில், தேமுதிக, புதிய தமிழகம் கூட்டணிக்கு வரவிருப்பதாக EPS சூசகமாக கூறியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
News January 30, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

தாயுமானவர் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள், முதியோருக்கு ரேஷன் பொருள்கள் ஒவ்வொரு மாதமும் வீட்டிற்கே வழங்கப்படுகின்றன. அந்த வகையில், பிப்ரவரிக்கான ரேஷன் பொருள்கள் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் வீடு தேடி விநியோகிக்கப்படும் என மாவட்ட வாரியாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. மேலும், இந்த தேதிகளை பொதுமக்கள் அறியும் வகையில் ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் எழுதி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


