News January 1, 2026
நாகை: 508 கிலோ கஞ்சா பறிமுதல்

நாகை மாவட்டத்தில் கஞ்சா போதைப் பொருட்களை ஒழிக்கும் பொருட்டு, 78 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 129 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 508 கிலோ கஞ்சா (மதிப்பு ரூ.50,85,600/-) மற்றும் 08 நான்கு சக்கர வாகனங்கள், 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 9, 2026
நாகை: கடலுக்குள் செல்ல தடை!

தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் கிழக்கு பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பலத்த தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாகை மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.
News January 9, 2026
நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க..
News January 9, 2026
நாகை – இலங்கை கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையிலான கப்பல் சேவை, வரும் ஜனவரி 18-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிட்வா புயல் தாக்கத்தால் கடந்த அக்டோபர் 26-ம் தேதி நிறுத்தப்பட்ட கப்பல் சேவை, துறைமுக சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மீண்டும் இயக்கப்படுகிறது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


