News January 1, 2026
கடலூர்: 16 வயது சிறுமி கர்ப்பம்!

காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த அஜித் (25). இவர் 16 வயது சிறுமியை கடந்த 5 மாதமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் சிறுமியின் வீட்டிற்கு சென்று, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் சிறுமி கருவுற்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் அஜித் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
கடலூர்: கஞ்சா விற்ற கணவன்- மனைவி கைது

கடலூர் முதுநகர் போலீஸ் எஸ்.ஐ. செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று மதியம் மணவெளி ரயில்வே கேட்டு அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு ரூ.2500 மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த மோகன்சிங் தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் குபேரன் (27), இவரது மனைவி ரேணுகா (27) ஆகியோரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.
News January 11, 2026
கடலூர்: மின்சாரம் தாக்கி மாணவர் சாவு

ஆலடி அடுத்த இருளக்குறிச்சியை சேர்ந்தவர் முத்து மகன் மணிகண்டன் (17). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மணிகண்டன், அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மின்சாரம் இல்லாததால், அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றார். அப்போது அவர் மீது மின்கம்பி உரசியதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 11, 2026
கடலூர்: லட்சக் கணக்கில் மோசடி செய்தவர் கைது!

சிதம்பரத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் செல்வம். இவரிடம் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த எஸ். பெருமாள் (39) என்பவர் தனியார் ஆப் மூலமாக லோன் வாங்கி தருவதாக கூறி ரூ.7,61,050 பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து செல்வம் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் பெருமாளின் செல்போன் எண்ணின் மூலமாக அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து, நேற்று அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


