News May 2, 2024
யூடியூபர் KGF விக்கி கைது

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பிரபல யூடியூபரும், துணிக் கடை ஓனருமான விக்கி (எ) விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்தனர். N.N.கார்டன் பகுதியில் KGF என்ற பெயரில் துணிக்கடை நடத்தி வருபவர் விக்கி. இவரது கடையில் வேலை பார்த்த ரிஸ்வான் என்பவரை, கடந்த மாதம் ஆள் வைத்து தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விக்கியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் புழல் சிறையில் அடைத்தனர்.
Similar News
News March 16, 2026
தமிழக தேர்தல்: விஜய் திடீர் முடிவு

சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தவெக முக்கிய நிர்வாகிகளுடன் விஜய் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2-ம் கட்ட வேட்பாளர் நேர்காணல் நடத்துவது தொடர்பாக அவர் விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் 25 நாள்கள் பரப்புரை மேற்கொள்வது குறித்தும் விஜய் ஆலோசித்துள்ளாராம். விரைவில் அவரது பரப்புரை திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 16, 2026
கில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற கேப்டனா?

BCCI விழாவில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற கேப்டன் என்று ரோஹித்துக்கு பதில் கில்லை குறிப்பிட்டது சர்ச்சையாகியுள்ளது. திரையில் ‘Winning Captain, ICC Champions Trophy 2025’ என்பதில் கில் படம் வந்ததால் ரோஹித் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சர்ச்சையை தொடர்ந்து SM-ல் இந்த பகுதியை மட்டும் BCCI நீக்கியுள்ளது. டெக்னிக்கல் பிரச்னை என்றாலும் ரோஹித் ரசிகர்களை இது ரொம்பவே காயப்படுத்தியுள்ளது.
News March 16, 2026
‘சந்தி சிரித்த சட்டம் – ஒழுங்கு’.. போராட்டம் அறிவித்த EPS

திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாடு சீரழிவதாகவும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலின், விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்துவதாக சாடியுள்ளார்.


