News January 1, 2026
குடியாத்தம்: பொதுமக்களிடம் வசமாக சிக்கிய திருடர்கள்!

குடியாத்தம் ஒன்றியம் உள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று 3 பேர் டிரான்ஸ்பார்மரில் ஏறி பொருட்களை திருட முயன்றனர். சத்தம் கேட்டு வந்த கிராம மக்கள் 3 பேரையும் பிடித்து குடியாத்தம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சக்திவேல் (20), சஞ்சய் (19), ராமஜெயம் (17) என தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் குடியாத்தம் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 14, 2026
வேலூர்: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

வேலூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க!
News January 14, 2026
வேலூர் சிறையில் இருந்து பரோலில் சென்ற 16 கைதிகள்

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் மத்திய சிறையில் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட பரோல் கேட்டு 30-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் சிறைத்துறை உயர் அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டது. இதில் நேற்று மதியம் வரை 16 கைதிகளுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அவர்கள் சிறையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News January 14, 2026
வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வேலூர் மாவட்டம் முழுவதும் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், இன்று (ஜன-14) முதல் 17-ம் தேதி வரை இந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என மாவட்ட காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


