News January 1, 2026
சென்னை: மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாப பலி!

வளசரவாக்கம், காமராஜ் அவென்யூ பகுதியை சேர்ந்த ஜோதிராஜ் மகன் வீரகுமார் (15) இவர் 8ம் வகுப்பு படிக்கிறார். இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர் வீட்டுக்கு விளையாட சென்ற போது மாடி கைப்பிடி சுவர் அருகே சென்ற மின்கம்பியில் உரசியதில் அவர் மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு கொண்டு செல்ல, டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 14, 2026
மெட்ரோ பயணிகள் கவனத்திற்கு…

சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை (15.01.2026) மற்றும் ஜன.16, 17 தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை தொடரும். காலை 5–12 மணி மற்றும் இரவு 8–10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12–இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10–11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News January 14, 2026
சென்னை: ஹாஸ்ப்பிடலில் சிகிச்சை சரியில்லையா?

சென்னை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News January 14, 2026
சென்னை: கூவம் ஆற்றில் குதித்த இளம்பெண் சடலமாக மீட்பு!

சென்னை அண்ணா சதுக்கம், நேப்பியர் பாலத்தில் இருந்து நேற்று இளம்பெண் ஒருவர் திடீரென கூவம் ஆற்றில் குதித்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் யுவஶ்ரீ (25) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெண்ணின் உடல் இன்று கரையொதுங்கியது. மேலும், உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


