News January 1, 2026

மயிலாடுதுறை: 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவித்த 27 நபர்கள், திருட்டு குற்றங்களில் – 3 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் – 14 நபர்கள், போதைப் பொருள் கடத்தல் – 1 நபர், பாலியல் குற்றங்களில் – 5 நபர் என மொத்தம் 50 பேர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2024-ஆம் ஆண்டு 47 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 12, 2026

மயிலாடுதுறை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

image

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது t<>nagrisnet.tn.g<<>>ov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News January 12, 2026

மயிலாடுதுறை: வாகனம் மோதி வாலிபர் பலி

image

செம்பனார்கோயில், பரசலூரை சேர்ந்தவர் திவாகீஷ் (30), இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரசலூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தபோது, மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த திவாகீஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News January 12, 2026

மயிலாடுதுறை: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 46 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 58 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு, பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு 9626169492 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!