News January 1, 2026
புதுச்சேரி மக்களே.. நீங்கள் சொல்லுங்கள்!

புதுவை மக்களே நாம் அனைவரும் புதிய வருடத்தில் நுழைந்து விட்டோம்! கடந்த 2025-ஆம் ஆண்டில் புதுவைக்கு வழக்கத்திற்கு மாறான மழை, வெயில் என வானிலை மாற்றங்களும், புதிய அரசு திட்டங்கள் கிடைக்கப்பெற்றது. இந்த சமயத்தில் நாம் அனைவரும் ஒன்றை நினைவு கூறுவோம். அதன்படி 2025ஆம் ஆண்டின் மறக்க முடியாத நினைவுகள் மற்றும் புதிய வருடத்தில் இதை செய்ய விரும்புகிறேன் என்பதை COMMENT செய்யவும். நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
Similar News
News January 10, 2026
புதுவை – திருப்பதி ரயில் நேரம் மாற்றம்

புதுவையிலிருந்து தினமும் இயக்கப்படும் திருப்பதி பயணிகள் ரயில் நேரம் ஜன.19 முதல் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி புதுவை ரயில் நிலையத்தில் இந்த ரயில் தினமும் பிற்பகல் 2:50 மணிக்கு புறப்படுகிறது. இனி இது பிற்பகல் 2:40-க்கு புறப்படும். வில்லியனூா் ரயில் நிலையத்தில் இந்த ரயில் 2:59 முதல் 3 மணி வரை நின்று செல்லும். ஆனால் இனி இந்த ரயில் அங்கு 2:49 முதல் 2:50 வரை நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News January 10, 2026
புதுவை கலெக்டர் கொடுத்த முக்கிய உத்தரவு

புதுவை கலெக்டர் அலுவலகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் குலோத்துங்கன் தலைமை வகித்தார். மேலும் சீனியர் எஸ்.பி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் தனியார் கொரியர் நிறுவனங்கள் மூலம் பார்சல் எடுத்து வரும் பொழுது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வருகின்றனவா என்பது குறித்து போலீசார் கண்காணிக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டார்.
News January 10, 2026
புதுச்சேரி: டிரைவர் தீக்குளித்து தற்கொலை

முத்திரையர்பாளையம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் செல்வகுமார். இவர், பிரியதர்ஷினி என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் காதலித்து, பெற்றோரை மீறி திருமணம் செய்துள்ளார். இவர்களுக்குக் குழந்தை இல்லாத நிலையில், மிகுந்த மன வருத்தத்தி இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இத்தகைய சூழலில், செல்வகுமார் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் தற்போது விசாரித்து வருகின்றனர்.


