News January 1, 2026
ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News January 1, 2026
உடல் சோர்வாக இருக்கிறதா? இதை சாப்பிடுங்க!

நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். இந்த உணவுகள் இயற்கையாகவே சோம்பலை நீக்கி, உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆற்றல் அளிக்க உதவுகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News January 1, 2026
புத்தாண்டில் வெளியான DCM பட அப்டேட்!

இயக்குநர் சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஆந்திர DCM பவன் கல்யாண் நடிப்பது உறுதியாகி உள்ளது. அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், இனி சினிமாவில் நடிக்கமாட்டார் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் படத்தின் கதையாசிரியர் வம்சி தனது X பதிவில், இந்த கனவு படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ராம் தல்லூரி இப்படத்தை தயாரிக்கிறார்.
News January 1, 2026
இன்று முதல் கார்களின் விலை உயர்கிறது

தீபாவளி பரிசாக மத்திய அரசு GST வரியை குறைத்ததால், பைக், கார்களின் விலையும் சரிந்தது. இதன் காரணமாக, வாகன பிரியர்கள் புதிய வாகனங்களை ஆர்வமுடன் வாங்கினர். இந்த நிலையில், உற்பத்தி செலவை காரணம் காட்டி, இந்தியாவில் இன்று முதல் கார்களின் விலை 3% வரை உயர்த்தப்படுகிறது. அதன்படி, Honda, Hyundai, Renault, Nissan, BYF, BMW உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் கார்களின் விலையை உயர்த்துகின்றன.


