News January 1, 2026
விஜய் தான் ‘ஜனநாயகன்’ டைரக்டரா?

விஜய் ஒரு பக்கா டைரக்டர் என்று ஹெச்.விநோத் கூறியுள்ளார். ஒரு இயக்குநருக்கு தெரிய வேண்டியதைவிட அதிகமாகவே அவருக்கு தெரிந்திருப்பதாக ஹெச்.விநோத் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே, பகவந்த் கேசரியை ரீமேக் செய்ய விஜய் விரும்பியதாக கோலிவுட்டில் பேசப்பட்டது. ஹெச்.விநோத்தும் அதை மறுக்காமல் இது தளபதி படம் என மழுப்பலாக பதிலளிக்கிறார். இதனால் ஜனநாயகன் டைரக்டர் விஜய் தானோ என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுகிறது.
Similar News
News January 28, 2026
தி.மலையில் தடையை மீறி சர்ச்சையில் சிக்கிய அர்ச்சனா!

2024 பிக்பாஸ் தமிழ் டைட்டில் வின்னர் அர்ச்சனா தேவையற்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார். திருவண்ணாமலை கோயில் மலையில் ஏற தடை உள்ள நிலையில், அவர் சில தினங்களுக்கு முன் இந்த மலை மலை உச்சிக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக அர்ச்சனா இன்ஸ்டாவில் பதிவிட, அது சர்ச்சையாகி இருக்கிறது. அந்த போஸ்ட்டை தற்போது இன்ஸ்டாவில் இருந்து டெலிட் செய்துவிட்டாலும், அர்ச்சனா மீது வனத்துறை நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.
News January 28, 2026
விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா?

தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ளதால் எந்த தொகுதியில் களமிறங்குவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். முதற்கட்டமாக காமராஜர் போட்டியிட்ட விருதுநகர், நாகர்கோவில் ஆகிய 2 தொகுதிகள் லிஸ்டில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விருதுநகரை தேர்வு செய்ய விஜய் விருப்பம் காட்டுவதாக பேசப்படுகிறது. விஜய் எந்த தொகுதியில் போட்டியிடலாம்?
News January 28, 2026
திருமணத்திற்கு முன்பே பிறந்த தமிழ் நடிகை

கமல்ஹாசன் 1988-ல் சரிகாவை திருமணம் செய்தபோது, அவர்களுக்கு பிறந்த ஸ்ருதிஹாசனுக்கு வயது 2. உண்மைதான், ஆனால் அதற்கு முன்பே இருவரும் லிவ்-இன் உறவில் இருந்துள்ளனர். அதனால் தான், கமலின் திருமண போட்டோக்களில் ஸ்ருதியும் இருப்பார் என்று கிசுகிசுக்கப்படும். திருமணத்திற்கு பிறகு பிறந்தவர் தான் மகள் அக்ஷரா. பின்னர், 2004-ல் கமல் – சரிகா உறவு விவாகரத்தில் முடிந்தது.


