News January 1, 2026
சிலிண்டர் விலை உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதந்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று முதல் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹110 ஏற்றப்பட்டு சென்னையில் ₹1,849.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் (14.2 கிலோ எடை) விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ₹868.50 ஆக தொடர்கிறது.
Similar News
News January 29, 2026
துணை முதல்வர் காலமானார்.. அதிர்ச்சி தகவல்!

விமான விபத்தில் மகாராஷ்டிரா DCM அஜித் பவார் நேற்று உயிரிழந்தார். இந்நிலையில், மோசமான வானிலையே இந்த விபத்திற்கு காரணம் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளார். முதல்முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போது, ஓடுதளம் தெளிவாக தெரியாததால் பைலட் விமானத்தை மேலே உயர்த்தியுள்ளார். 2-வது முறை தரையிறங்க முயன்ற போதே, விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
News January 29, 2026
USA – க்கு படையெடுக்கும் இந்திய நிறுவனங்கள்

இந்தியாவிலிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் அமெரிக்காவுக்கு படையெடுத்து செல்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக வாடிக்கையாளர்கள், விரைவான முதலீடு கிடைக்க வாய்ப்பு, ஏஐ-க்கு உகந்த சூழல் ஆகியவை இந்நிறுவனங்கள் US பக்கம் செல்ல வழிவகுத்துள்ளன. இந்நிலையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
News January 29, 2026
திமுகவுக்கு இதுதான் வில்லன்: கடம்பூர் ராஜூ

2021 தேர்தல் வாக்குறுதியில் 15% கூட நிறைவேற்றாததால் இம்முறை அவர்களின் தேர்தல் அறிக்கை அவர்களுக்கே வில்லனாக மாறும் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருப்பதால் திமுகவுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது என்ற அவர், திமுகதான் ஓடாத இன்ஜின், அது இனியும் ஓடாது என்றார். மேலும், அதிமுக கூட்டணி நிச்சயமாக 210 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.


