News January 1, 2026
காங்கிரஸுடன் கூட்டணியா? அருண்ராஜ் பதில்

அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை என தவெகவின் அருண்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விஜய்யை CM வேட்பாளராக ஏற்கும் கட்சிகளை கூட்டணியில் அரவணைத்து ஏற்க தயார் என்று அவர் கூறியுள்ளார். காங்கிரஸ், தவெக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, உரிய நேரத்தில் அறிவிப்பு வரும் என்றும், கூட்டணி அமைப்பு குழு அமைத்தவுடன் அதற்கான பணிகள் தொடங்கும் எனவும் அவர் பேசியுள்ளார்.
Similar News
News January 11, 2026
திருப்பத்தூர்: INCOME TAX துறையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

இந்திய வருமான வரித்துறையில், விளையாட்டு வீரர்களுக்கு MTS, Stenographer, Tax Assistant Post பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10th, 12th, ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதும். மாத சம்பளம் ரூ.18,000 முதல் 81,100 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <
News January 11, 2026
பொங்கல் பரிசால் உயிர் பறிபோனது

திருச்சி கருங்குளத்தை சேர்ந்த ஜெனிபருக்கும், அவரது கணவருக்கும் இடையே தமிழக அரசு அறிவித்த ₹3000 பொங்கல் பரிசுத் தொகையை யார் வாங்குவது என்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சண்டை முற்றிய நிலையில், மனமுடைந்த ஜெனிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் உடலை கைப்பற்றி, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News January 11, 2026
அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்

அன்புமணி தரப்பு பாமக அதிமுக கூட்டணியில் இணைந்த நிலையில், தேர்தல் கூட்டணி குறித்து பேசுவதற்கு அன்புமணிக்கு அதிகாரமில்லை என ECI-க்கு ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக பெயரை அன்புமணி சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும், இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


