News January 1, 2026

10 மாவட்டங்களில் மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை TN-ல் உள்ள 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, விருதுநகர், தேனி, தஞ்சை, திருவாரூரில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து வீடு திரும்புவோர் பாதுகாப்பாக பயணிக்கவும். உங்க ஊரில் மழை பெய்கிறதா?

Similar News

News January 8, 2026

நெஞ்சை உருகவைக்கும் போட்டோ ❤️

image

ஐயப்பனை கண்டுவிட மாட்டோமா என இரும்புக் கம்பிகளுக்கு பின்னால், பக்தர்கள் காத்திருக்கின்றனர். அருகே, களைப்பை தலையணையாக்கி தந்தை படுத்திருக்க, அவர் மார்பில் உலகமே மறந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறது இந்த மாளிகபுரம். கோயிலில் தந்தையின் மார்பே அந்த குழந்தைக்கு சன்னதியாகி விட்டது. தந்தையின் இதயத் துடிப்பையே, கோயில் மணியோசையாக அக்குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, நெட்டிசன்கள் உருகிபோயுள்ளனர்.

News January 8, 2026

பொங்கல் விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு, வெளியூரில் இருப்போர் சிரமமின்றி சொந்த ஊர் செல்ல ஏதுவாக, நாளை முதல்(ஜன.9) 6 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. தமிழகம் முழுவதும் 34,087 பஸ்கள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். www.tnstc.in இணையதளம், TNSTC ஆப்பில் டிக்கெட் புக் செய்து கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?

News January 8, 2026

10 ஆண்டுக்கு பிறகு PAK-BAN இடையே நேரடி விமான சேவை!

image

பாகிஸ்தானுடன் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஜன.29 முதல் டாக்கா – கராச்சி இடையே நேரடி விமான சேவையை வங்கதேசம் மீண்டும் தொடங்க உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியா-வங்கதேச உறவில் மோதல் வெடித்துள்ள நிலையில், பாக்., உடனான உறவில் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது. அதன் பலனாக நேரடி விமான சேவை மீண்டும் துவங்க உள்ளது. மோதல் போக்கு காரணமாக இரு நாடுகள் இடையேயான விமான சேவை 2012-ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது.

error: Content is protected !!