News January 1, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஜன.1) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
Similar News
News January 28, 2026
தம்பி விஜய்யுடன் கூட்டணி சேரும் அண்ணன்

தமிழக அரசியல் களம் ஏற்கெனவே சூடாக உள்ள நிலையில் அதனை கொந்தளிக்க வைக்கும் வகையில் யாரும் எதிர்பாரா புதிய கூட்டணியை அமைக்கிறாராம் விஜய். ராமதாஸ் தரப்பு தவெகவுடன் ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மறுபக்கம் 100 தொகுதி, DCM, 6 அமைச்சர் பதவி தருகிறோம். நாம் இணைந்தால் ஆட்சி நமதே என விஜய் சீமானிடம் பேசியுள்ளார். இதற்கு சீமானும் நேரில் பேசலாமே என சிக்னல் கொடுத்துள்ளாராம். இந்த கூட்டணி அமையுமா?
News January 28, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 28, தை 14 ▶கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 AM – 12:00 PM ▶திதி: தசமி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.
News January 28, 2026
மூன்று பக்கமும் முட்டி மோதும் OPS

தனது ஆதரவாளர்கள் பலரும், ஒவ்வொரு கட்சியில் தஞ்சம் அடைந்துவிட்ட நிலையில் OPS தற்போது புது ரூட்டை பிடித்துள்ளார். திமுகவிடம் தான் கைகாட்டும் 5 பேருக்கு சீட் கொடுங்க என்றும், தவெகவிடம் எனக்கு கட்சி பொறுப்பை தாண்டி பெரிய இடம் வேண்டும் என்றும் கேட்டுள்ளராம். இதுபோக, NDA பக்கம் சாய்ந்த TTV-யிடம், 3 பேருக்கு மட்டும் சீட் கொடுங்க, நாங்க குக்கர் சின்னத்துலேயே நிற்கிறோம் என்று தகவல் கொடுத்துள்ளராம்.


