News January 1, 2026
நாட்டறம்பள்ளி அருகே தங்க நகை திருட முயன்ற மூதாட்டி கைது

நாட்டறம்பள்ளி அடுத்த அதிபெரமனூர் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 61) இவர் வீட்டில் இன்று (டிச.31)வாணியம்பாடி அருகே தும்பேரி சேர்ந்த மீனா என்பவர் திறந்த வீட்டுக்குள் நுழைந்து வீட்டில் பீரோவில் வைத்திருந்த தங்க நகை மற்றும் ரொக்க பணம் திருட முயன்றார். அப்போது வீட்டிற்குள் வந்த மாணிக்கம் மூதாட்டி கையும் களவுமாக பிடித்து நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலிசார் மூதாட்டியை கைது செய்தனர்.
Similar News
News January 14, 2026
திருப்பத்தூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி விசைத்தறி உரிமையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை நேற்று (ஜன-13) வெளியிட்டுள்ளார். அதில் “சாதாரண விசைத்தறிகளை,
நவீன மயமாக்கல் (Powerloom Modernisation scheme) திட்டத்தின் மூலம் விசைத்தறிகளுக்கு தலா ரூ.1,00,000 வரை மானியம் வழங்கப்படுகிறது எனவும் இந்த வாய்ப்பை அனைவருக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
News January 14, 2026
திருப்பத்தூர்: தொழில் முனைவோருக்கு கடனுதவி

சிறு தொழில் மேற்கொண்டு வரும் தொழில் முனைவோருக்கு தொழிலை மேம்படுத்த வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட தொழில் மையம் மூலம் இதுவரை 669 தொழில் முனைவோர்களுக்கு ரூ.14,00,19,000 மதிப்பீட்டில் தொழில் தொடங்க வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியர் சிவசௌந்திரவள்ளி அறிவித்துள்ளார்.
News January 14, 2026
திருப்பத்தூர்: நிரந்தர பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்!

திருப்பத்தூர் மக்களே.., பீர்க்கன், பாகல், புடலை உள்ளிட்ட கொடி வகை காய்கறிகளுக்கு பந்தல் அமைக்க செலவு அதிகம் என்ற கவலை இனி வேண்டாம். தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், நிரந்தர பந்தல் அமைத்து கொடிவகை காய்கறிகள் / பழங்களை சாகுபடி செய்ய ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் அருகில் இருக்கும் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். SHARE IT!


