News January 1, 2026

திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.31) சமூக வலைதளங்களில் பல போலியான பெயர்களில் மோசடி நபர்கள் வலம் வருகின்றனர். அவர்களின் வலையில் சிக்கி உங்கள் பணத்தை இழக்க வேண்டாம். எச்சரிக்கை.! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Similar News

News January 2, 2026

BREAKING: திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

image

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே, மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரசு பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 2, 2026

திண்டுக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு

image

திண்டுக்கல், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News January 2, 2026

திண்டுக்கல் வரும் CM ஸ்டாலின்

image

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஜன.7ம் தேதி திண்டுக்கல் வருகிறார். அன்று நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதோடு அரசு திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார். மேடை, முதல்வர் வாகனம் வரும் பாதை, பொதுமக்கள் அமரும் இடம், வாகன நிறுத்தும் இடம் ,பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சக்கரபாணி ஆலோசனை நடத்தினார்.

error: Content is protected !!