News May 2, 2024
25 ஆண்டுகளுக்குப் பின் ஏ.ஆர்.ஆர், பிரபுதேவா கூட்டணி

25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ’25 years of Pan india swag’ என்ற பெயரில் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மனோஜ் இயக்கும் இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News January 30, 2026
தங்கம் விலை தடாலடியாக மாறியது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில் 1 அவுன்ஸ்(28g) $5,000-ஐ கடந்துவிட்டது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ் $104.27 (இந்திய மதிப்பில் ₹9,578) உயர்ந்து $5,412.23-க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியும் $3.88 அதிகரித்து $117.3 ஆக உள்ளது. இதனால் இன்று இந்திய சந்தையிலும் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
News January 30, 2026
திமுகவின் திடீர் ஊதுகுழல் போல பேசும் EPS: தவெக

கரூரில் 41 பேர் இறந்ததற்கு விஜய்தான் காரணம் EPS கூறிய நிலையில் அவருக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்துள்ளார். கரூர் சம்பவத்தில் அன்று உண்மையை உரக்க பேசிய எதிர்க்கட்சி தலைவர் EPSக்கும், இன்று திமுகவின் திடீர் ஊதுகுழல் போல, தான் பேசியதையே மாற்றிப் பேசும் அதிமுக பொதுச்செயலாளர் EPSக்கும் எத்தனை வித்தியாசங்கள் என்றும், மக்களின் தலைவர் விஜய் என்பதை காலம் விரைவில் புரிய வைக்கும் எனவும் கூறியுள்ளார்.
News January 30, 2026
காலை நேரத்தில் இந்த உலர் பழங்களை சாப்பிடாதீங்க!

காலை வெறும் வயிற்றில் சில உலர் பழங்களை தவிர்ப்பது நல்லது. அந்த வகையில் உலர்ந்த அத்திப்பழம் செரிமான கோளாறு மற்றும் வயிற்று அசெளகரியம் தரலாம். பேரீச்சம்பழம் அதிக சர்க்கரை இருப்பதால் காலை சாப்பிடுவது நல்லதல்ல. உலர் திராட்சை செரிமானத்திற்கு கடினமாக இருக்கலாம். ஆப்ரிகாட் காலை நேரத்தில் வயிற்றுக்கு ஏற்றதல்ல. எனினும் இந்த உலர் பழங்களை பகல் நேரத்தில் ஊற வைத்து சாப்பிடுவதால் பல ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.


