News January 1, 2026
“இந்தியா வல்லரசாகும் வரை கடன் கிடையாது” – வைரல் வியாபாரி

மேட்டுப்பாளையம் நீலகிரி மலையின் அடிவார பகுதியில் இருப்பதால் மலை காய்கறிகள், பழங்கள், உருளைக்கிழங்குகள் மொத்த வியாபார “ஹப்”பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று லோடு ஆட்டோவில் வைத்து பழ வியாபாரம் செய்து வரும் வியாபாரி ஒருவர் தனது ஆட்டோவில் “இந்தியா வல்லரசு ஆகும் வரை கடன் கிடையாது” என பதாகை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த பதாகை தற்போது வைரலாகி வருகிறது.
Similar News
News January 15, 2026
காந்திபுரம் பாலத்தில் இருந்து குதித்தவர் உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் (43). இவரது மகன் ஜெகன் (17). இவர் காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கடந்த 7-ம் தேதி கீழே குதித்தார். பின்னர் படுகாயம் அடைந்த அவர் கோவை GH-ல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News January 15, 2026
மருதமலையில் இதற்கு தடை!

பொங்கல் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஜன.15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மருதமலை சுப்ரமணிய சாமி கோயிலுக்கு காரில் மலை மேல் செல்ல கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் மலைப்படிகள் மற்றும் கோயில் பேருந்து வாயிலாகவும் மலைக்கு செல்லலாம். (இத்தகவலை SHARE பண்ணுங்க)
News January 15, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (14.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


