News May 2, 2024
இந்தியாவின் தீவுகளைக் கண்டறிந்ததே நான் தான்!

இந்தியாவுக்குச் சொந்தமான தீவுகளை சாட்டிலைட் சர்வே மூலம் தான் கண்டறிந்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் ஜூனாகத்தில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம் லீக்கின் மொழியில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை எழுதப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம். ஆனால் அதனை மீண்டும் கொண்டு வருவோமென அரச குடும்பத்தினர் வெளிப்படையாகக் கூறி வருவதாகவும் சாடினார்.
Similar News
News February 4, 2026
இதை நினைத்தால் கவலையாக இருக்கு: தோனி

இந்திய டி20 அணியை மிகவும் அபாயகரமான அணி என தோனி தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தேவையான அனுபவம், கடினமான சூழலுக்கு ஏற்ப விளையாடும் திறன் என அனைத்தும் இந்திய வீரர்களுக்கு உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால், பனிப்பொழிவின் தாக்கத்தினால் போட்டிகளின் முடிவுகள் மாறுவதாக குறிப்பிட்ட அவர், அதுமட்டுமே தனக்கு கவலை தரக்கூடிய விஷயம் என பேசியுள்ளார்.
News February 4, 2026
பிரபல இசையமைப்பாளர் காலமானார்

காஞ்சிபுரம் வட்டாரத்தில், மேடை மெல்லிசை நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கார்த்திக் குணா உடல்நலக்குறைவால் காலமானார். கீபோர்ட் வாசிப்பதில் கைதேர்ந்த இவர் காஞ்சிபுரம் பற்றி இசையமைத்த பாடல் SM-ல் வைரலாகி இருந்தது. சில தமிழ் குறும்படங்களுக்கும் இவர் இசையமைத்திருக்கிறார். கார்த்திக் குணாவின் மறைவிற்கு இசைத்துறையை சேர்ந்த பலரும், அவரது ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News February 4, 2026
பிப்ரவரி 4: வரலாற்றில் இன்று

உலகப் புற்றுநோய் நாள் *1747–தமிழறிஞர் வீரமாமுனிவர் நினைவு நாள் *1895–நாடக நடிகர் பி.ஏ.சுப்பையா பிள்ளை பிறந்தநாள் *1943–பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியம் பிறந்தநாள் *1974–இயற்பியலாளார் சத்தியேந்திர நாத் போஸ் நினைவு நாள் *1985–பதிப்பாசிரியர் மே.வீ.வேணுகோபாலன் நினைவு நாள் *2004–பேஸ்புக் தொடங்கப்பட்ட நாள் *2023–பாடகி வாணி ஜெயராம் நினைவு நாள்


