News May 2, 2024

பாஜக ஆட்சி மீண்டும் வராது

image

பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என்பது முடிவு செய்யப்பட்ட ஒன்று என சசி தரூர் தெரிவித்துள்ளார். 400 இடங்களில் வெல்வோம் என்ற பாஜகவின் பேச்சு நகைச்சுவை என்று குறிப்பிட்ட அவர், கடந்த முறை பாஜக வென்ற 300 இடங்கள் மீண்டும் கிடைக்காது என்றார். 2 கட்டத் தேர்தலிலேயே பாஜகவின் தோல்வி உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். சசி தரூர் போட்டியிட்ட திருவனந்தபுரம் தொகுதியில் ஏப்., 26இல் தேர்தல் நடைபெற்றது.

Similar News

News February 12, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 12, தை 29 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 12:30 PM – 1:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 6:30 AM – 7:30 AM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை: 9:00 AM – 10:30 PM ▶திதி: தசமி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: தெற்கு▶பரிகாரம்: தைலம்.

News February 12, 2026

அண்ணா, MGR-ஐ விட பலம் வாய்ந்தவரா விஜய்?

image

‘ஆட்சியில் பங்கு’ என வெளிப்படையாக அறிவித்தும், தவெகவுடன் இதுவரை யாரும் கூட்டணி வைக்கவில்லை. ஆனாலும், விஜய் மேடைக்கு மேடை 1967 & 1977-ல் நிகழ்ந்ததைப் போன்ற மாற்றம் 2026-லும் ஏற்படும் என்கிறார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், 1967-ல் திமுகவும் (அண்ணா), 1977-ல் அதிமுகவும் (MGR) கூட்டணி வைத்தே ஆட்சியை பிடித்தன. அப்படி இருக்கையில் விஜய் தனித்து ஆட்சியை பிடிக்க முடியுமா என கேள்வி எழுகிறது.

News February 12, 2026

பிப்ரவரி 12: வரலாற்றில் இன்று

image

*1502 – வாஸ்கோடகாமா தனது இரண்டாவது இந்திய வருகைக்காக லிஸ்பனில் இருந்து தனது கப்பலில் புறப்பட்டார்.
*1928 – காந்தி பர்தோலியில் சத்தியாக்கிரகத்தை அறிவித்தார்.
*1923 – முதல் திமுக பெண் அமைச்சர் சத்தியவாணி முத்து பிறந்த தினம்
*1809 – ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்
*2001 – மனித மரபணுவின் முதல் வரைவு மற்றும் அதன் ஆரம்ப பகுப்பாய்வு நேச்சர் இதழில் வெளியானது * தேசிய உற்பத்தித்திறன் தினம்

error: Content is protected !!