News December 31, 2025
BREAKING: 2026 பிறந்த உடனே அதிர்ச்சி

புத்தாண்டு பிறந்த சில மணி நேரங்களே ஆன நிலையில், ஜப்பான் மக்களை பெரும் சோகம் சூழ்ந்துள்ளது. 6 ரிக்டர் என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் அந்நாட்டு மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கடலின் 19.3 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் சேதாரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக, இன்று பகலில் 3.4 ரிக்டர் என்ற அளவில் திபெத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
Similar News
News January 28, 2026
முத்தக் காட்சியால் நடிகை மீனா கண்ணீர்

‘அவ்வை சண்முகி’ படத்தில் கமலுடன் முத்தக் காட்சியில் நடத்த அனுபவம் குறித்து நடிகை மீனா பேசியது SM-ல் வைரலாகி வருகிறது. அதில், முத்தக் காட்சியில் நடிக்க துளியும் உடன்பாடு இல்லை; என்னால் இதை செய்ய முடியாது என அம்மாவிடம் சொல்லி புலம்பினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தபோதே ஷாட் ரெடி எனக் குரல் கேட்டதால் பயத்தில் கண்ணீர் வடித்ததாகவும் நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
அஜித் பவார் மரணத்தில் சந்தேகம்: மம்தா பானர்ஜி

அஜித் பவாரின் மறைவை சுட்டிக்காட்டி, அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். NDA-வில் இருந்த அஜித் பவார் வெளியேற இருந்த சூழலில் இந்த விபத்து நடந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், SC கண்காணிப்பில் இதுகுறித்து விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். SC தவிர்த்து வேறு எந்த அமைப்பின் மீதும் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறியுள்ளார்.
News January 28, 2026
மாதம் ₹6000 வரை கிடைக்கும்

தீன் தயாள் உபாத்யாயா ஊரக திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வேலையில்லாத கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சியை முடித்து வேலையில் சேர்பவர்களுக்கு வேலை செய்யும் நிறுவனம், 2 – 6 மாதங்களுக்கு ₹6,000 வரை ஊக்கத்தொகை வழங்குகிறது. இதில் 15 – 35 வயதுடைய, 10-வது தேர்ச்சி பெற்ற கிராமபுற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். <


