News December 31, 2025
போதையில் இருப்பவர்களுக்கு இன்று Free Ride!

புத்தாண்டு கொண்டாட்டத்தில் அளவுக்கு அதிகமாக போதையில் இருப்பவர்களை இலவசமாக வீட்டிற்கு அழைத்து செல்ல உள்ளதாக தெலங்கானா டெலிவரி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை இந்த இலவச சேவை வழங்கபட உள்ளது. இதற்காக 500 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சேவையை பெற விரும்புவர்கள் 8977009804 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
9 நாள்கள் நடந்த தமிழக தேர்தல்.. எப்போது தெரியுமா?

17-வது சட்டப்பேரவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில், இதுவரை நடந்த 16 பேரவைத் தேர்தல்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடைபெற்றன, எத்தனை கட்டங்களாக நடைபெற்றன என்பதை மேலே உள்ள போட்டோஸை வலப் பக்கமாக ஸ்வைப் செய்து அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் எந்த தேர்தலில் உங்கள் முதல் வாக்கை செலுத்துனீர்கள், அப்போது யார் ஆட்சி அமைத்தது என்று கமெண்ட் பண்ணுங்க.
News February 9, 2026
அண்ணாமலை விலகல்.. தமிழக பாஜகவில் பரபரப்பு

பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து அண்ணாமலை விலகியது, தமிழக பாஜகவில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை கமலாலயத்தில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அண்ணாமலை அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பாஜகவின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
ராமதாஸ் உடன் திமுக கூட்டணி பேசவில்லை: ஐ.பெரியசாமி

திமுக கூட்டணிக்குள் பாமக வந்தால், விசிக கூட்டணியில் இருந்து வெளியேறும் என <<19073730>>திருமாவளவன் <<>>தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூட்டணியில் இணைவது தொடர்பாக திமுகவிடம் ராமதாஸ் தரப்பில் இருந்து பேசவில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். அதேபோல் ஸ்டாலினும் பாமக தரப்பிடம் பேசவில்லை என்றும், எங்களது கூட்டணி பலமாகவே உள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.


