News December 31, 2025

போதைப்பொருள் விற்பவர்கள் ஏன் கைதாகவில்லை? ஆதவ்

image

TN-ல் பள்ளி மாணவர்கள் மத்தியிலேயே போதைப்பழக்கம் அதிகரித்துவிட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் போதைபொருள் பயன்படுத்துபவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டதாகவும், அதை விற்பவர்கள் யார் என்று ஆட்சியாளர்களுக்கு தெரியாதா, CM-க்கு தெரியாதா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். மதுபான விற்பனையில் கவனம் செலுத்தும் அரசு போதையால் வரும் பாதிப்புகளை தடுக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.

Similar News

News February 2, 2026

மாரடைப்பை 10 வருடங்களுக்கு முன்பே அறியலாம்!

image

உடலில் தெரியும் சில அறிகுறிகளை வைத்தே, கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்பே, மாரடைப்பு வரவுள்ளதை அறியலாம் என ‘JAMA Cardiology’ இதழின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீரென உடலில் சக்தி குறைவது, நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பது, உடல் உழைப்பின்றி இருப்பது போன்றவை பின்னாளில் இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என கூறப்படுகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளுங்கள். அதுவே பல பிரச்னைகளை தடுக்கும். SHARE IT.

News February 2, 2026

DCM சுனேத்ரா பவார் மீது ₹25,000 கோடி மோசடி புகார்

image

சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி மோசடி புகாரே சரத் பவார், அஜித் பவார் அணியை மீண்டும் ஒன்று சேராமல் தடுத்து சுனேத்ராவை மீண்டும் NDA கூட்டணியில் இணைத்துள்ளதாம். 2002 – 2017 காலகட்டத்தில் MSCB வங்கியில் போலியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாக அவர் மீதான மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவு(EOW) போலீசார் அவரை விடுவித்தாலும், ED வழக்கை தூசித்தட்டி விசாரணை நடத்தி வருகிறது.

News February 2, 2026

டிமாண்டை ஏற்றிக்கொண்டே போகிறதா காங்கிரஸ்?

image

திமுகவிடம் வரும் தேர்தலுக்கு மட்டுமல்லாமல், 2029 தேர்தலுக்கும் சேர்த்து ராகுல் டீல் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, கொள்கைகளை செயல் வடிவம் ஆக்க அதிகாரத்தில் பங்கு முக்கியம் என்ற அவர், இப்போதே லோக்சபா தேர்தலுக்கு 15 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என உத்தரவாதம் கேட்கிறாராம். இதனால் திமுக சற்று டென்ஷனில் இருப்பதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!