News May 2, 2024
ஒரே மாதத்தில் 21,000 ஊழியர்கள் பணி நீக்கம்

கடந்த 4 மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள 271 நிறுவனங்கள், 78 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்க கண்காணிப்பு வலைதளமான Layoffs.fyi வெளியிட்ட அறிக்கையில், டெஸ்லா (14,000), ஜெட்டிர் (6,000), ஆப்பிள் (600) ஆகியவை அதிக பணிநீக்கங்களைச் செய்துள்ளன. கடந்த ஏப்ரலில் மட்டும் 21,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
அதிமுகவை பாஜக கபளீகரம் செய்யும்: உதயநிதி

பிஹாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலையே EPS-க்கும் ஏற்படும் என உதயநிதி கூறியுள்ளார். 10 முறை CM ஆக இருந்த நிதிஷ்குமாரையே தற்போது ராஜ்யசபா MP ஆக மாற்றி, அம்மாநில ஆட்சியை பாஜக தன்வசமாக்கிவிட்டது என்ற அவர், இதேபோல் தான், 2026 தேர்தலுக்குப் பிறகு அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்று குறிப்பிட்டார்.
News March 14, 2026
தவெகவில் இருந்து நீக்குக.. விஜய்க்கு பரபரப்பு கடிதம்

‘அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களை கட்சியை விட்டு விலக்குங்கள்’ என விஜய்க்கு பாஜக நிர்வாகி அர்ஜுன மூர்த்தி கடிதம் எழுதியுள்ளார். ரஜினி குறித்து ஆதவ் உள்ளிட்டோர் அரசியல் நாகரிகம் இல்லாத கருத்துகளால் தேவையற்ற மோதல்களையும், மரியாதை குறைபாடுகளையும் உருவாக்கி வருகின்றனர். தங்கள் மீதுள்ள மரியாதையும், அவர்களின் பேச்சால் பதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதால், கட்சியில் இருந்து நீக்குங்கள் என கூறியுள்ளார்.
News March 14, 2026
சசிகலா கட்சி சின்னமும் ஜெ., அழைப்பும்.. REWIND

அஇபுதமமுக கட்சியில் இணைந்துள்ள சசிகலா, அக்கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்படுத்தினார். இதற்கு முன்பாக 2016-ல் தமாகாவுக்கு இச்சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. அப்போது இரட்டை இலையில் போட்டியிடுமாறு ஜெ., அழைத்தும், GK வாசன் செல்லவில்லை. தென்னந்தோப்பு சின்னத்தில் தோல்வியடைந்த அவர், பின்னாளில் அதிமுக சின்னத்திலேயே போட்டியிட்டு ராஜ்யசபா MP ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


