News May 2, 2024

“ரா” குறித்து அமெரிக்கா, ஆஸி அறிக்கை; இந்தியா மெளனம்

image

இந்திய உளவுத்துறை ராவின் செயல்பாடு குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொடர்பாக பதிலளிக்காமல் இந்தியா மெளனம் காக்கிறது. ஆஸ்திரேலியாவின் ஏபிசி, சிட்னி ஹெரால்ட், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவை “ரா”வை குற்றம்சாட்டிச் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்குப் பதிலளித்தால், மேலும் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படலாம் என இந்தியா நினைப்பதாகக் கூறப்படுகிறது.

Similar News

News September 21, 2025

வீட்டிலேயே பொலிவு பெற

image

வீட்டிலேயே பழங்களை வைத்து எளிதாக அழகை பராமரிக்கலாம். என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த டிப்ஸை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குறைந்தது 10 நிமிடங்கள் செய்ய வேண்டும். பின்னர், உங்கள் முகம் பளபளக்கும். இதில் நீங்க எதை ட்ரை செய்திருக்கீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 21, 2025

விஜய் புதிய சாதனை.. முதலிடம் பிடித்தார்

image

நடிகர் விஜய்யின் படங்கள் வசூலில் சாதனை படைப்பது போலவே, அவரின் இன்ஸ்டா அக்கவுண்ட்டும் சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் நடிகர்களில் அதிக இன்ஸ்டா ஃபாலோவர்ஸை(14.6 மில்லியன்) கொண்ட நடிகர் என்ற பெருமைக்கு விஜய் சொந்தக்காரராகி இருக்கிறார். இது அவரின் Unmatchable ஸ்டார் பவரை காட்டுகிறது. அரசியலுக்கு விஜய் வந்ததில் இருந்து, அவருக்கு சோஷியல் மீடியாவில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

News September 21, 2025

Paytm-ல் கொண்டுவரப்பட்ட புது வசதி!

image

கடையில் பொருள் வாங்கிய பிறகு, காசில்லை என்றால் இனி சங்கடப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்கு Paytm, ‘Spend Now, Pay Next Month’ என்ற குறுகிய கால கடன் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இம்மாதம் பரிவர்த்தனைகள் செய்வது விட்டு, அதற்கான தொகையை அடுத்த மாதம் கட்டலாம். ஆனால், இந்த கடனை பெற, நல்ல கிரெடிட் ஸ்கோரும், கரெக்ட்டான Repayment Capacity கட்டாயம் தேவைப்படுகிறது.

error: Content is protected !!