News December 31, 2025
செய்தி தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்திய விஜய்

தவெகவின் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார். அதன்படி பொறுப்பாளராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய செய்தித் தொடர்பாளர்களாக பெலிக்ஸ் ஜெரால்டு, வழக்கறிஞர் சத்தியகுமார், தேன்மொழி பிரசன்னா ஆகியோர் உள்ளனர். மேலும் மாநில செய்தித் தொடர்பாளர்களாக முகில் வீரப்பன், அமலன், ஆனந்தஜித் உள்ளிட்டோரை விஜய் நியமித்துள்ளார்.
Similar News
News January 5, 2026
இவர்களுக்கு மாதம் ₹1,000 கிடைக்கும்

காசநோயாளிகளுக்கு மாதாமாதம் ₹1,000 நிதியுதவி வழங்குகிறது நிக்ஷய் போஷன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட TB நோயாளிக்கு சிகிச்சை முடியும் வரை உதவித்தொகை வழங்கப்படும். பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ₹1 லட்சத்திற்கு மிகாமல் இருக்கணும். <
News January 5, 2026
வங்கதேச அணியை வழிநடத்தும் இந்து கேப்டன்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட விவகாரம் இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக KKR அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரகுமான் நீக்கப்பட்டார். எனினும் 2026 WC டி20-யில் வங்கதேச அணி கேப்டனாக இந்துவான லிட்டன் தாஸ் செயல்பட உள்ளதை கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விளையாட்டில் அரசியலை புகுத்தி வரும் நிலையில், இந்த முடிவு ஒற்றுமையை விதைப்பதாகவும் கூறுகின்றனர்.
News January 5, 2026
சர்க்கரையை கட்டுப்படுத்தும் ‘கொய்யா இலை தேநீர்’

கொய்யா இலை தேநீர் அருந்துவது செரிமானத்தை மேம்படுத்தவும், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும் உதவும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள். மேலும் இது உடல்பருமனை கட்டுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவும்: எப்படி செய்வது: தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, அதில் 4-5 புதிய கொய்யா இலைகளைச் சேர்க்கவும். 2-4 நிமிடங்கள் கொதித்தபின் வடிகட்டி, தேன் சேர்த்தால் ‘கொய்யா இலை தேநீர்’ ரெடி. SHARE IT


