News December 31, 2025
புதுச்சேரி மக்களே..நாளை இதை செய்ய மறக்காதீங்க!

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. அவ்வகையில் இவ்வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் எந்த குறையுமின்றி வாழ, மகாலட்சுமியை வழிபடலாம் என்பது ஐதீகம். இதற்கு உங்கள் வீட்டில் உலோக ஆமை, துளசி செடி, சிரிக்கும் புத்தர் மற்றும் தேங்காய் வைத்து லட்சுமியை வழிபட்டால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள லட்சுமி கோயிலுக்கு சென்று வழிபடுங்கள்.
Similar News
News January 13, 2026
புதுச்சேரி: அல்மான்ட் இருமல் மருந்திற்கு தடை

பீகார் மாநில ‘ட்ரிடஸ் ரெமிடீஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பான, ‘அல்மான்ட் கிட் சிரப்’ என்ற மருந்திற்குத் புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வில், இந்த சிரப்பில் சிறுநீரகத்தை மிகக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய, எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப்பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட, மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டதால், தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 13, 2026
புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க…
News January 13, 2026
புதுவை காவல் துறை முக்கிய அறிவிப்பு

புதுவையில், கடந்த 06.12.2025 அன்று கூனிச்சம்பட்டு – மணலிபட்டு சாலையில் ஏற்பட்ட மோதலில், கூனிச்சம்பட்டு காலனியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையின் போது இறந்தது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ, புகைப்படம், ஒலி பதிவு அல்லது வேறு ஏதேனும் பதிவுகள் யாரிடமாவது இருந்தால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


