News December 31, 2025
சொத்துப் பத்திரம் தொலைந்துவிட்டதா?

வீடு (அ) நிலத்தின் பத்திரம் ஒருவேளை தொலைந்துவிட்டால் முதலில் போலீஸ் ஸ்டேஷனில் FIR பதிவு செய்துவிட்டு, பத்திரிகையில் விளம்பரமும் கொடுக்க வேண்டும். அப்படியும் கிடைக்கவில்லை என்றால் போலீசிடம் NOT TRACEBLE என்ற சான்றை பெற்று நோட்டரி வழக்கறிஞர் மூலம் முத்திரைத்தாளில் பத்திரம் தொலைந்து விட்டது என உறுதி சான்று பெற வேண்டும். பின்னர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் உங்களுடைய பத்திர நகலைப் பெற்றுக்கொள்ளலாம்.
Similar News
News January 17, 2026
ஆட்சியில் பங்கு கேட்டாரா ராகுல் காந்தி?

நீலகிரிக்கு வந்திருந்த ராகுல் காந்தி காங்., கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் மீட்டிங் நடத்தியிருந்தார். இதில் நிர்வாகிகள் தரப்பில் ஆட்சியில் பங்கும், 3 அமைச்சர்கள் பதவியும், அதிக தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்ற் கோரிக்கைகள் வலுத்ததாம். இதற்கு ராகுல் காந்தி மறுப்பு தெரிவிக்கவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் ராகுலும் அதே முடிவில்தான் இருக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News January 17, 2026
‘ஜன நாயகன்’ பட ரிலீஸ்.. புதிய அப்டேட் வந்தது

விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்பட சென்சார் விவகாரத்தில் ஜன.20-ம் தேதி <<18862962>>ஐகோர்ட் <<>>முடிவெடுக்க SC உத்தரவிட்டது. ஒருவேளை அன்று சென்சார் கொடுக்க உத்தரவிட்டால், குடியரசுத் தினத்தையொட்டி ஜன.24-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜன.24 முதல் 26 வரை தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வருகிறது; இதை பயன்படுத்திக்கொள்ள படக்குழு இம்முடிவை எடுத்துள்ளதாம்.
News January 17, 2026
EPS காலில் விழுந்த பாமக MLA

சேலத்தில் அதிமுக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்க வந்த EPS-க்கு பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்த பாமக MLA சதாசிவம், திடீரென்று அவரது காலில் விழுந்து கும்பிட்டார். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், EPS எதிரில் இருந்த நிர்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தார். இதுதொடர்பான போட்டோ SM-ல் வெளியான நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLA, காலில் விழுவது சரியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.


