News December 31, 2025
நத்தம்: கணவனுக்கு கத்திக்குத்து.. மனைவி வெறிச்செயல்!

நத்தம் அருகே முளையூரைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கும், இவரது மனைவி தீபாவுக்கும் இடையே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக இன்று ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மனைவி தீபா, கணவர் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த ராஜா நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 11, 2026
BREAKING: திண்டுக்கல்லில் குற்றவாளி சுட்டுப் பிடிப்பு!

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ்(31). கொலை குற்றவாளியான இவர் தலைமறைவாக இருந்துள்ளார். விக்னேஷ் இருப்பிடம் குறித்து தகவலறிந்து சென்ற போலீசார், அவரை பிடிக்க முயன்றனர். அப்போது, காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் விக்னேஷை துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். பின்னர் காயமடைந்த எஸ்.ஐ மற்றும் விக்னேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
News January 11, 2026
திண்டுக்கல்: பொங்கல் பரிசு.. முக்கிய தகவல்!

திண்டுக்கல் மக்களே, பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 11, 2026
திண்டுக்கல்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

திண்டுக்கல் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


