News December 31, 2025
தேனி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க
Similar News
News January 10, 2026
தேனி: பெண்ணிற்கு கொலை மிரட்டல்; தாய், மகன் கைது..!

தேவாரத்தை சேர்ந்த லீலாவதி கணவர் இறந்த நிலையில் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா். இந்நிலையில் பூர்வீக சொத்து தொடர்பாக இவருக்கும், உறவினரான முருகனுக்கும் பிரச்சனை இருந்தது. இதையடுத்து நேற்று முன் தினம் தோட்டத்திற்கு வந்த முருகனின் மனைவி பந்தானலட்சுமி, மகன் யுவராஜ் ஆகியோர் லீலாவதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து 2 பேரையும் கைது செய்தனர்.
News January 10, 2026
தேனி: இனி எல்லா CERTIFICATE-ம் உங்க WhatsAPP-ல்..

தேனி மக்களே, பிறப்பு, இறப்பு, வருமானச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ் என 50 வகையான அரசு சான்றிதழ்களை பெற இனி அரசு அலுவலகலகம் சென்று அலைய வேண்டியதில்லை. தமிழக அரசு மெட்டா நிறுவனத்துடன் இணைந்து 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்களுக்கு தேவையான சான்று பற்றி குறுஞ்செய்தியும், தகுந்த ஆதாரமும் அனுப்பினால் போதும். தேவையான சான்றிதழ் உங்கள் வாட்ஸ் அப்-க்கே வரும்.
News January 10, 2026
தேனி: காய்கறி வியாபாரி கொலை… 2 பேர் கைது..!

கோம்பையை பகுதியை சோ்ந்த காய்கறி வியாபாரி ராஜ்குமாா் 2 தினங்களுக்கு முன் சாலையில் உடலில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். கொலை குறித்து போலீஸ் விசாரணையில் ராஜ்குமாருக்கும், முத்துராஜ் என்பவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்தது தெரியவந்தது. இதனால் முத்துராஜ் கூலிப்படை சேர்ந்த 2 பேருடன் ராஜ்குமாரை கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.


