News December 31, 2025
தூத்துக்குடி: ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் இன்று காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் – ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 2, 2026
தூத்துக்குடி: மின்சாரம் தாக்கி இளைஞர் பரிதாப பலி

எப்போதும் வென்றான் அருகே உள்ள கீழச்செய்த்தலை கிராமம் கீழத்தெருவைச் சேர்ந்வர் மகாராஜா (24). இவர் இன்று அதிகாலை தனது வீட்டில் மோட்டார் சுவிட்சை போடும்போது, மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 2, 2026
தூத்துக்குடி: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

தூத்துக்குடி மக்களே, நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என GoogleMap வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 2, 2026
திருச்செந்தூரில் ஐயப்ப பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பலர் திருச்செந்தூருக்கு வந்து செல்கின்றனர். இன்று அதிகாலை சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று திருச்செந்தூர் நோக்கி வந்தது. திருச்செந்தூர் அருகே வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 13 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருச்செந்தூர் G.H-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


