News December 31, 2025

கிருஷ்ணகிரி வாக்காளர்கள் கவனத்திற்கு..

image

கிருஷ்ணகிரி மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 3, 2026

கிருஷ்ணகிரி: 12th போதும், ஆதாரில் வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க

News January 3, 2026

ஓசூர்: இன்ஸ்டா காதலால் பறிபோன உயிர்!

image

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் இதுபற்றி விசாரிக்கின்றனர்.

News January 3, 2026

கிருஷ்ணகிரியில் இன்று கரண்ட் கட்!

image

கிருஷ்ணகிரி மாவட்டம்ஜூஜூவாடி, பேகேபள்ளி, குருபரப்பள்ளி துணை மின் நிலையங்களில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேகேபள்ளி, தர்கா, சிப்காட், சூர்யா நகர், குருபரப்பள்ளி, விநாயகாபுரம், ஜீனூர், நல்லூர், தீர்த்தம், சானசந்திரம், தொரப்பள்ளி & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!