News May 2, 2024

கடை ஊழியர் மீது தாக்குதல்: கேஜிஎப் விக்கி கைது

image

வண்ணாரப்பேட்டை என்.என். கார்டன் பகுதியில் கே.ஜி.எஃப் என்ற பெயரில் விக்கி (எ) விக்னேஸ்வரன் என்பவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் முன்பு பணிபுரிந்த ரிஸ்வான் என்ற ஊழியரை கடந்த மாதம் ஆட்களை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Similar News

News August 24, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள கவலைகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

News August 24, 2025

சென்னை: புலனாய்வு துறையில் வேலை; ரூ.81,000 வரை சம்பளம்

image

மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பிரெஷர்ஸ் கூட தாராளமாக விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து செப்.14க்குள் விண்ணப்பிக்கவும். செம்ம வாய்ப்பு. B.sc முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 24, 2025

வேப்பேரியில் காதலன் கண்முன்னே காதலி தற்கொலை

image

வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் மற்றும் ஹர்ஷிதா ஆகியோருக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், ஹர்ஷிதாவின் குணநலனில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தர்ஷன் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். இதில் மனமுடைந்த ஹர்ஷிதா, தர்ஷனின் வீட்டிற்கு வந்து பேசி கொண்டிருந்தபோது, திடீரென 7வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து தர்ஷனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!