News December 31, 2025
தமிழ் பாடகி காலமானார்.. உருக்கமாக இரங்கல்

பருத்திவீரன் பட பாடகி லட்சுமி அம்மாள் மறைவு செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார். பல நாட்டுப்புற பாடல்கள் பாடிய அவர், திரைத்துறையிலும் புகழ்பெற்றவராக இருந்தார். நமது சென்னை சங்கமம் கலைவிழாவிலும் பங்கேற்று பாடியவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆழ்த்த இரங்கல் என்று கனிமொழி தெரிவித்துள்ளார். அதேபோல், திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News January 12, 2026
தூய்மைப் பணியாளர் பத்மாவுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கீழே கிடந்த 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்து பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் பத்மாவை, முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் நேரில் அழைத்து பாராட்டினார். அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து, ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கினார்.
News January 12, 2026
ஹாஸ்பிடல் கொலைக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில், உயிர்காக்கும் ஹாஸ்பிடல்கள் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக மாறும் அளவுக்கு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். TN-யையும், TN மக்களையும் காப்பாற்ற ஒரே வழி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 12, 2026
11 ஆண்டுக்கு பிறகு வரும் Perfect பிப்ரவரி!

உங்க காலண்டரை திருப்பி பாருங்க. பிப்ரவரியில் சரியாக 28 நாள்கள், 4 வாரங்கள் வரும். 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி 28-ம் தேதி சனிக்கிழமையில் முடிகிறது. Non- Leap வருடங்களில் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதே, Perfect February-யாக அமைகிறது. கச்சிதமாக வரும் இந்த February 6 அல்லது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். முன்னர், 2015-ல் நிகழ்ந்தது. அடுத்ததாக 2037-ல் தான் நிகழுமாம். SHARE IT.


