News December 31, 2025
விஜய் உடன் மோதும் அஜித்

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனை மிகப்பெரிய வெற்றியடைய செய்ய வேண்டும் என நினைத்த அவரது ரசிகர்களுக்கு, பேரிடியாக ஒரு தகவல் வந்துள்ளது. அஜித்தின் மங்காத்தாவை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம் SM-ல் வீடியோ பகிர்ந்துள்ளது. ஜன.10-ல் மங்காத்தா ரீ-ரிலீசானால் மீண்டும் தல, தளபதி கிளாஷ் உருவாகும். பராசக்தியும் ரிலீஸ் ஆவதால் ஜனநாயகனின் வசூல் பாதிக்கும் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News February 2, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹1.25 லட்சம் குறைந்தது

<<19027688>>தங்கம் போலவே<<>> வெள்ளி நகைகளின் விலையும் சரசரவென குறைந்து வருகிறது. வெள்ளி இன்று மட்டும் கிலோவுக்கு ₹20,000 குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக கடந்த 4 நாள்களில் கிலோவுக்கு ₹1.25 லட்சம் சரிந்துள்ளது. சென்னையில் தற்போது, வெள்ளி 1 கிராம் ₹300-க்கும், 1 கிலோ ₹3 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சர்வதே சந்தை நிலவரம் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதால், விலை மேலும் குறையலாம்.
News February 2, 2026
மாத்திரைகளுக்கு வலி எங்கே என்று தெரியுமா?

உண்மையில் மாத்திரைகள் வலி இருக்கும் இடத்தை தானாக கண்டறிவதில்லை. அது இரத்த ஓட்டத்தில் கலந்து உடல் முழுவதும் பயணிக்கிறது. அப்போது உடல் முழுவதும் பரவி வலி ஏற்படும் இடத்தில் சுரக்கும் ‘புரோஸ்டாக்லாண்டின்ஸ்’ எனும் ரசாயனங்களின் உற்பத்தியை தடுத்து நிறுத்துகிறது. இதனால் மூளைக்கு அனுப்பப்படும் வலியின் சிக்னலை தடுக்கிறது. இப்படித்தான் நமக்கு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
News February 2, 2026
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுகிறதா?

வேலூரில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் அருகே அகரம்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்தன. இந்நிலையில், விஜய் மக்கள் சந்திப்புக்கு இதுவரை காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பிப்ரவரி 4-வது வாரத்திற்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தள்ளிவைக்க தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


